முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

நாம் வாழும் பூமியின் வயது என்ன?

Updated On : 25 ஏப்ரல், 2020 at 7:36 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:01 PM

கேள்வி: நாம் வாழும் பூமியின் வயது என்ன?

பதில்: நம்மைப் போல பூமிக்குப் பிறந்த தின அத்தாட்சி (அதாவது பர்த் சர்ட்டிபிகேட்), ஆதார் அட்டை எல்லாம் கிடையாது. இருந்தாலும் உலக விஞ்ஞானிகள் பலரும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பூமியின் வயதைத் தீர்மானிக்கப் பலவகைகளிலும் முயற்சி செய்து வந்திருக்கி          றார்கள், வருகிறார்கள். 

பூமி பிறந்த போது அந்த நாளைக் குறித்து வைக்க யாரும் இல்லையே! 

Advertisement

சரி, எப்படிப் பூமியின் வயதைக் கண்டுபிடிப்பார்கள் அல்லது கண்டுபிடித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது  அல்லவா?

பூமியின் பல பகுதிகளிலும் இருக்கும் பாறைகளை வைத்துதான் பூமியின் வயதைக் கண்டுபிடிக்கிறார்கள். இதிலும் பல சிக்கல்கள் இருந்தன.  பழைய பாறைகள் காற்றினாலும்  பல்வேறு புயல்களா லும் நீராலும் தேய்ந்து, உடைந்து போய்விடுவதால் எது  மிகப் பழைய பாறை என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலை இருந்தது. இருந்தாலும் பல்வேறு புதிய புதிய யுத்திகள் மூலம் உலகின் மிகப் பழைய பாறைகளை விஞ்ஞானிகள் இனம் கண்டு, பூமியின் வயதைத் தோராயமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  கனடாவில் கிடைத்துள்ள பாறைகள் 4.03 பில்லியன் ஆண்டுகள் பழைமையானவை. 

இதை வைத்து, தற்போதைக்கு பூமியின் வயது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். இன்னும் புதிதாக யாராவது கண்டுபிடித்தால், இந்த வயது இன்னும் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.