நிலையாமை
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பிற.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM
அறத்துப்பால் - அதிகாரம் 34 - பாடல் 7
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பிற.
- திருக்குறள்
வாழ்வின் உயர்ந்த தன்மையை
அறிவில்லாதவர் உணர்ந்திடார்
நுட்பம், நுணுக்கம் தெரிந்தவர்
உண்மைத் தன்மை உணருவார்
Advertisement
இன்பம் துன்பம் இரண்டையும்
உணர்ந்தால் தெளிவு பிறந்திடும்
தெளிவில்லாமல் கோடி எண்ணம்
கொண்டு வாழ்வது வீண் செயல்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்