தெரிந்து வினையாடல்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்துஅதனை அவன்கண் விடல்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:35 PM
பொருட்பால் - அதிகாரம் 52 - பாடல் 7
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
- திருக்குறள்
இந்தச் செயலைச் செய்திட
எந்த வழிமுறை பயன்படும்
என்று தெரிந்து செய்பவரைத்
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்து
Advertisement
இந்தக் கருவியின் உதவியால்
இவன் இதனைச் செய்திடுவான்
என்று தெளிந்த பின்னாலே
அவனிடத்தில் விட்டுவிடு.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்