கடி
""ஒருவர் பொறை,.... இருவர் நட்புன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்?''""நான் பொறை வாங்கினால் நீ டீ வாங்கணும்!''
""ஒருவர் பொறை,.... இருவர் நட்புன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்?''
""நான் பொறை வாங்கினால் நீ டீ வாங்கணும்!''
ஆர்.யோகமித்ரா, சென்னை 600073.
""பாட்டி,.... எனக்கு இன்னிக்கு ரெண்டு பரிட்சை!''
""அப்படியா?.... ரெண்டு பரிட்சையும் முடிஞ்சு எப்போ வருவே?''
""சாயங்காலம்!''
""சரி,.....இந்தா காசு!... வரும்போது ரெண்டு முட்டை வாங்கிட்டு வா!....
Advertisement
எஸ்.வெங்கடகாயத்ரி, சென்னை.
""அவன் சாப்பிட்ட உடனே படுத்துடறான்!.....''
""சில சமயம் அப்படித்தான்!.... டயர்டாயிடும்!.... கவலைப்படாதீங்க!''
""அதில்லே,.... கை கழுவாமயே படுத்துடறான்!''
நா.வினோத் குமார்,
அரக்கோணம் 632510.
""ஏன் தலை முடியை வெட்டலே?""
""தலை எப்படி முடியை வெட்டும்?.....கத்தரிக்கோல்தான் வெட்டும்!''
என்.வி.குமார்,
அரக்கோணம்.
""தல புராணங்கள் படிச்சிருக்கியா?''
""அஜீத்தப் பத்தி புஸ்தகமெல்லாம் வந்திருக்கா என்ன?''
ஆர். கிருத்திக்குமார்,
நெய்வேலி 607803.
""இவ்வளவு அழகழகான பறவைகள் எல்லாம் எங்கேயிருந்துடா வருது?''
""எல்லா பறவைகளும் முட்டயிலேயிருந்தான் வருதுடா!''
வி.இந்துகுமரப்பன்,
விழுப்புரம் 605602.