கடி
""தினமும் எங்கம்மா என்னைக் கேட்டுட்டு தான் சமையல் செய்வாங்கடா.அடப் பாவமே உங்கம்மாவுக்கு சமையல் பன்ன தெரியாதா?''
""தினமும் எங்கம்மா என்னைக் கேட்டுட்டு தான் சமையல் செய்வாங்கடா.
அடப் பாவமே உங்கம்மாவுக்கு சமையல் பன்ன தெரியாதா?''
பொ.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம் - 608002
""நான் இன்னிக்கு முறுக்கு, சீடை, தட்டையெல்லாம் சாப்பிட்டேண்டா!''
""ஐயய்யோ!..... தட்டையுமா சாப்பிடுவே?''
Advertisement
ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயாராம்,
திருநெல்வேலி டவுன் - 627006.
""கரோனா எப்பத்தான் முடியுமோ?....
எப்பத்தான் ஸ்கூல் திறப்பாங்களோ?''
""திறந்தா என்ன செய்வே?''
""லீவு லெட்டர் குடுக்கலாம்னு பார்க்கிறேன்!
ஆர் . சுப்பு,
திருத்தங்கல்
""கிளாஸ்ல உங்க பையன் தொண, தொண..ன்னு பேசிக்கிட்டே இருக்கானாம் சார்!...''
"உங்களுக்கு எப்படி அது தெரியும்?"
"என் பையன் கூடத்தான் பேசிக்கிட்டு இருக்கானாம்!....வாத்தியார் சொன்னாரு!''
- வி. ரேவதி,
தஞ்சாவூர்.
""இந்தக் கோயில்லே உனக்குப் பிடிச்ச சந்நிதி எதுடா?''
""பிரசாத சந்நிதிதான்!''
ஏ.நாகராஜன்,
பம்மல்.
""எதுக்கு மாவு மில்லுக்குப் பதுங்கிப் பதுங்கிப் போறே?''
""எங்கம்மா அரிசியை நைஸா அரைச்சுக்கிட்டு வரச்சொன்னாங்க!''
கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.