வெகுளாமை
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கை பிழையா தற்று.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:19 PM
அறத்துப்பால் - அதிகாரம் 31 - பாடல் 7
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையா தற்று.
- திருக்குறள்
கோபம் காட்டி ஒன்றினைச்
சாதிக்கலாம் என்பது
அறிவில்லாத செயலது
அழிவு தரும் செயலது
Advertisement
தரையில் ஒங்கி அடிப்பவன்
கைகள் நன்றாய் வலித்திடும்
அதைப் போலவே கோபத்தின்
பின் விளைவு அமைந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்