முகப்பு
சிறுவர்மணி

தூய்மையால்  விரட்டுவோம்!

​நோயைப் பரப்பும் கிருமிகளைத் தூய்மையாலே விரட்டிடுவோம்!பாய்ந்தே தாக்க வருவதனைப் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:


நோயைப் பரப்பும் கிருமிகளைத் 
தூய்மையாலே விரட்டிடுவோம்!
பாய்ந்தே தாக்க வருவதனைப் 
பயந்தே ஓடச் செய்திடுவோம்!

அழுக்குப் படியும் கைகளினை 
அடிக்கடிக் கழுவித் துடைத்திடுவோம்!
ஒழுகும் மூக்கைத் துணி கொண்டு 
உடனே சுத்தம் செய்திடுவோம்!

கண்ணுடன் மூக்கு செவியதனைக் 
கைகளால் தொடுவதைத் தவிர்த்திடுவோம்!
உண்ணும் உணவில் கவனம் வைப்போம் 
உடல் நலம் காத்து உயிர் காப்போம்!

இருமல் தும்மல் வரும்பொழுது 
இருகை கொண்டு மூடிடுவோம்
பரவும் நோயைத் தீர்ப்பதற்கு 
நிரந்தரத் தீர்வைத் தேடிடுவோம்!

படுக்கை முதலாய்ப் பயன்படுத்தும் 
பொருள்களைச் சுத்தமாய் வைத்திடுவோம்!
உடுத்தும் உடையின் தூய்மையையும் 
உடல் நலம் காக்கும் அறிந்திடுவோம்!

தரையைச் சுத்தம் செய்திடுவோம்
தன் முனைப்போடு செயல்படுவோம்!
எந்தக் கிருமியும் இங்கே யார்க்கும்
பரவா வண்ணம் தடுத்திடுவோம்!

வரும் முன் காப்பது நன்றதனால்
வராது என்றென்றும் நோய்கள்!
நாமனைவரும் ஒன்றாய்ச் செயல்படுவோம்
நோயை வென்று வாழ்ந்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.