சிறுவர்மணி

பிஞ்சுக்கை ஓவியத்திற்கு ஒரு சின்னஞ்சிறு கதை!

பாலுவும் வேலுவும் அண்ணன் தம்பிகள். தம்பி வேலு தைரியசாலி, சமயோஜித புத்திக்காரன். அண்ணன் பாலு மிகவும் சாது. பயந்தாங்கொல்லி. அம்மா-அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். 

DIN

 அச்சம் தவிர்!
 பாலுவும் வேலுவும் அண்ணன் தம்பிகள். தம்பி வேலு தைரியசாலி, சமயோஜித புத்திக்காரன். அண்ணன் பாலு மிகவும் சாது. பயந்தாங்கொல்லி. அம்மா-அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள்.
 பள்ளிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்த இருவரும் தங்கள் தெருவுக்குள் நுழையப் போனபோது, அடுத்த தெருவில் இருந்து வந்த மகுடி இசை இருவரையும் கவர்ந்திழுத்தது. உடனே வேலு அங்கே ஓடினான்.
 "வேண்டாம்டா... போகாதே... எனக்கு பயமா இருக்கு...'' என்றான் பாலு.
 "பயந்தாங்கொல்லி... நீ வேணா வீட்டுக்குப் போடா.... நான் வேடிக்கை பார்த்துட்டு வரேன்...'' என்றவன் கூட்டத்துக்குள் புகுந்து தன் தோளில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.
 பின்னாலேயே ஓடிய பாலு, வேலுவின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு பயந்தபடி தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான்.
 இரு குட்டிப் பாம்புகளை வைத்து வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தான் பாம்பாட்டி. திடீரென்று ஒரு குட்டிப் பாம்பு "சர்ர்ர்' ரென்று கூட்டத்துக்குள் புகுந்துவிட்டது. உடனே எல்லோரும் சிதறி ஓடத் தொடங்கினர்.
 "டேய்..டேய்... உன் ஸ்கூல் பேக்கை அங்கேயே வச்சிட்ட பாரு...'' என்று நினைவுபடுத்தினான் பாலு.
 "அச்சச்சோ.. இப்ப என்னடா பண்றது...'' என்ற வேலு, "பாம்பாட்டி அங்கிள்... ப்ளீஸ்...ப்ளீஸ்... என் பையை மட்டும் எடுத்துக் கொடுங்களேன்...'' என்றான்.
 பை கிடைத்ததும் "தப்பித்தோம் பிழைத்தோம்' என்று இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
 கை, கால்களை சுத்தம் செய்த இருவரும் ஹாலுக்கு வந்தபோது அதிர்ந்துபோய் நின்றனர். வேலுவின் ஸ்கூல் பையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது அந்தக் குட்டிப் பாம்பு. இதைப் பார்த்த இருவரும் அப்படியே செய்வதறியாமல் உறைந்துபோய் நின்றனர். பாலு சத்தம்போட்டு அழத் தொடங்கினான்.
 சடாரென்றுஅடுத்த ரூமில் இருந்த ஒரு பெரிய கூடையை எடுத்து பாம்பை மூடிவிட்டான் வேலு. "சீக்கிரமா
 என்னோட ஓடிவா....'' என்று வேலு ஓட, அவனைத் தொடர்ந்து பாலுவும் ஓடினான்.
 ஓடிக்கொண்டே பாலு கேட்டான் "எங்கடா ஓடற..... யாராவது பெரியவங்களைக் கூப்பிட்டு பாம்பை அடிச்சுப் போட்டுடலாண்டா!''
 "சீச்சீ!..... அது ரொம்ப பாவம்டா!.... பேசாம... எங்கூட வா... நான் எது செஞ்சாலும் அதுல அர்த்தம் இருக்கும்டா! ....''
 பக்கத்துத் தெருவுக்கு ஓடினான் வேலு. நடந்ததைப் பாம்பாட்டியிடம் சொல்லி வீட்டுக்குக் கூட்டிவந்தான்.
 பாம்பாட்டி மகுடியை எடுத்து ஊதியவாறே, மெல்ல கூடையைத் திறக்க அதிலிருந்து பாம்பு பாம்பாட்டியின் கூடைக்குள் புகுந்தது!. "பட்'டென்று கூடையின் மூடியை மூடினான் பாம்பாட்டி.
 "நல்லகாலம் பிள்ளைகளா!..... சிலபேர் பாம்பை அடிச்சுடுவாங்க!..... நீங்க தைரியமா பாம்பை கூடையிலே அடைச்சு பத்திரமா எங்கிட்டே சேர்த்துட்டீங்க!.... ரொம்ப சந்தோஷம்!''
 "அப்பாடா... தப்பிச்சிட்டோம்டா...இப்பதான் உசுரே வந்தது'' பெருமூச்சு விட்டான் பாலு. இருவருக்கும் வியர்த்திருந்தன.
 வீட்டினுள் நுழைந்த அம்மாவிடம், வேலுவின்
 சமயோஜித புத்தியைப் போற்றிப் புகழ்ந்த பாம்பாட்டி... தன் பாம்பு கிடைத்த மகிழ்ச்சியில் பாடிக்கொண்டே தெருவில் இறங்கி நடந்தான்.
 வேலுவும் பாலுவும் ஓடிப்போய் அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டு தங்கள் பயத்தையும், படபடப்பையும் போக்கிக் கொண்டனர்.
 -மணிவாசகப்பிரியா
 படம் வரைந்தவர் - ச.சந்தோஷ்,
 6 - ஆம் வகுப்பு, ஜெயம் நடுநிலைப்பள்ளி, சோழபுரம் - 612503.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT