முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

கோஹினூர் வைரம் எங்கே இருந்து வெட்டி எடுக்கப்பட்டது?

Updated On : 14 நவம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

கோஹினூர் வைரம் எங்கே இருந்து வெட்டி எடுக்கப்பட்டது?

பதில்: கோஹ் இ நுர். பெர்சிய மொழியில் இதன் பொருள் ""மலையின் ஒளி"".
இந்த கோஹினூர், கோஹ் இ நூர் அல்லது கோஹ் இ நுர் என்றும் உச்சரிக்கப்படுகின்றது.

இது ஒரு காலத்தில் உலகில் அதிகம் அறியப்பட்ட  வைரமாக இருந்தது.
இது 105 கேரட் வைரம்.

Advertisement

இந்தியாவை ஆட்சி செய்த காகத்தியர்களின் ஆட்சிப் பகுதிக்குட்பட்ட கோல்கொண்டா பகுதியிலிருந்து கிடைத்தது.

பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது.

மேலும் அவர்கள் இதை போர் நேரத்தில் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பாழ்படுத்தினர்.

இது இறுதியாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாகக் கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில், மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் ஒரு பகுதியாக அடங்கிப் போனது.

தற்போது இது இங்கிலாந்து அரசியிடம் உள்ளது.

இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது இங்கிலாந்து செல்லும்போதும் அந்நாட்டவர் இந்தியா வரும்போதும் இந்தியத் தலைவர்கள் இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகக் கூறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.