முகப்பு
சிறுவர்மணி

முயலின் குட்டிக் கரணம்!

ஒருவர் தன் வீட்டில் முயல்களை வளர்த்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முயல் துருதுரு என்றிருந்தது! அதை அவர் குட்டிக்கரணம் போட வைத்துப் பழக்குகிறார்.

Updated On : 28 நவம்பர், 2020 at 5:00 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

ஒருவர் தன் வீட்டில் முயல்களை வளர்த்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முயல் துருதுரு என்றிருந்தது! அதை அவர் குட்டிக்கரணம் போட வைத்துப் பழக்குகிறார். அந்தக் குட்டி முயல் மூன்று குட்டிக்கரணம் போட்டதும் அவர் அதற்கு ஒரு கேரட் தருவார். 

வீட்டில் யாராவது விருந்தாளி வரும்போது அவர்களுக்குத் தன் கொல்லையில் வளர்க்கும் முயல்களைக் காண்பிப்பார். இந்த துருதுரு முயலைக் கூப்பிட்டு விருந்தாளிமுன் மூன்று குட்டிக்கரணம் போடச் செய்வார். விருந்தாளிகள் ஆச்சரியப்படும்போது இவர் போனஸாக முயல்குட்டிக்கு ஒரு கேரட் தருவார்.

அந்தக் குட்டி முயல் தன் சக முயல்களிடம், ""இந்த ஆள் ரொம்ப தமாஷான ஆள்!.... வேடிக்கையைப் பார்!.... நான் குட்டிக்கரணம் போடுகிறேன்.... இவன் ஓடி வந்து கேரட் தருவான் பாருங்க!'' என்றது. 

Advertisement

மூன்று குட்டிக்கரணம் போட்டது முயல்! ஓடி வந்து அவர் கேரட் கொடுத்தார். ஏனைய முயல்கள் அந்த ஆள் செய்யும் சர்க்கஸை ரசித்து மகிழ்வது வழக்கமாகிவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.