முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

சிங்கம் சிங்கிளாகத்தான் வரும், பன்றிகள்தான் கூட்டமாக வரும் என்று அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இதுஉண்மையா?

Updated On : 5 செப்டம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:45 PM


கேள்வி: சிங்கம் சிங்கிளாகத்தான் வரும், பன்றிகள்தான் கூட்டமாக வரும் என்று அடிக்கடி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இதுஉண்மையா?

பதில்: இந்த வரிகள் சிலரைப் பெருமைப்படுத்துவதற்காக, சற்று உயர்வுநவிற்சி அணியாகக் கூறப்பட்டது.

சில குறிப்பிட்ட இனங்களைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் கூட்டமாகத்தான் திரியும். எங்கு சென்றாலும் ஒரு குழுவாகத்தான் செல்லும். அதுதான் அவற்றுக்குப் பாதுகாப்பாகவும், உணவு தேடுவதற்கு உதவியாகவும் இருக்கும். இதற்கு சிங்கம் மட்டும் விதிவிலக்கல்ல.

Advertisement

எப்படிப் பன்றிகள் கூட்டம் கூட்டமாகப் பெற்றோர், குழந்தைகள் உறவினர்கள் என்று ஒரு குழுவாகப் புறப்பட்டு வருகின்றனவோ அதேபோலத்தான் சிங்கமும்.
நீங்களே பார்த்திருப்பீர்கள்... டிஸ்கவரி சேனல் மற்றும் நேஷனல் ஜியாக்ராபி தொலைக்காட்சிகளில்.சிங்கம் எப்பவும் தனது பெண்துணை மற்றும் குட்டிகளோடு ஒன்றாகத்தான் உலா வரும். தனது குடும்பத்தைவிட்டு சிங்கம் ஒருபோதும் பிரியாது. தனது உணவு வேட்டைக்காகச் செல்லும்போதுகூட தனது உற்ற துணையுடன்தான் எப்போதும் செல்லும். ஒருமுறைகூட தனியாகச் செல்லாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.