சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல் மணம் தரும் பொருள் ஒன்றைக் குறிக்கும் சொல். மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள்...
1. விறகடுப்புக்கு உற்ற துணை இவன்...
2. பந்து விளையாட்டுகளில் உலகப் பிரசித்தி பெற்றது...
3. கைகூப்பி, தலை சாய்த்தால் இது வரும்...
4. வாழ்க்கை பற்றி ஞானிகள் கூறுவது...
5. சில கணக்குகளை எளிதாகச் செய்வதற்கு இது அவசியம்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1.ஊதுகுழல்,
2. கால்பந்து,
3. வணக்கம்,
4. தத்துவம்,
5. சூத்திரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : ஊதுவத்தி