முகப்பு
சிறுவர்மணி

கடி

""பையனை எதுக்குத் திட்டறீங்க ?""" நாலாம் கிளாசோடு "வி ஆர் எஸ்'  வாங்க வழி இருக்கான்னு கேட்கிறான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:


""பையனை எதுக்குத் திட்டறீங்க ?"
"" நாலாம் கிளாசோடு "வி ஆர் எஸ்'  வாங்க வழி இருக்கான்னு கேட்கிறான்.

" என்.பர்வதவர்த்தினி,
சென்னை.

""குட் பாய்! ...ன்னு சொன்ன உடனே அவன் ஏன் வெளியே போயிட்டான்?''
""அவன் காதுலே அது,  "குட் பை!' ன்னு விழுந்துட்டுது சார்!''

ஏ. நாகராஜன்
பம்மல்,  சென்னை.


""என்னது, கொஸ்டின் பேப்பர் இவ்வளவு ஈரமா இருக்கு?''
"" லீக்கான கொஸ்டின் பேப்பரோ என்னமோ?''

ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

""மழையிலே நனையாம இருக்கறதுக்கு எல்லாரும் கார்லே வந்திருக்காங்க!''
""ஓ!..... இதுதான் "கார்' காலமா?''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

"" அப்பா, விலங்குன்னா என்னப்பா?''
""அதுவா, ஐந்தறிவு உள்ள பிராணிகளை அப்படிச் சொல்லுவாங்க...''
""அதெப்படிப்பா, அதைக் கையிலே மாட்டுவாங்க?''

திருமதி சுகந்தாராம், 
கிழக்குத் தாம்பரம், சென்னை - 600059.

""டாக்டர்!.... என் பையன் ஒரு சிம் கார்டை முழுங்கிட்டான்!''
""கவலைப் படாதீங்க,..... ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாம்!''
""அவன் ஸ்கேனை முழுங்கலையே!... அதை எதுக்கு எடுக்கணும்?.... நீங்க 
சிம் கார்டை எடுங்க,....''

கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம் - 605602.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.