முகப்பு
சிறுவர்மணி

கடி

""நேற்று நடந்த கிரிக்கெட் ஆட்டத்தில் நம்ம ஊரு அணி ஏன் தோத்துப்போச்சு?''""வெரி சிம்பிள்!....எதிர் அணி ஜெயிச்சுடுச்சு!''

Updated On : 3 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

""நேற்று நடந்த கிரிக்கெட் ஆட்டத்தில் நம்ம ஊரு அணி ஏன் தோத்துப்போச்சு?''
""வெரி சிம்பிள்!....எதிர் அணி ஜெயிச்சுடுச்சு!''

ப.செல்வன், 
லசரவாக்கம், சென்னை - 600087.

""இசைக்கருவிகளில் எது ரொம்ப விலை அதிகம் தெரியுமா?''
""நீயே சொல்லு...''
""மிரு"தங்கம்' தான்!''

Advertisement

கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.

""ஓட்டப்பந்தயத்திலே கலந்துகிட்டியே, பரிசு கிடைச்சுதா?''
""ஒ!...கிடைச்சுதே''
""உனக்கா?''
""இல்லே..... ஜெயிச்சவங்களுக்கு!''

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

""பாலு, கிரவுண்டுக்குக் கிழக்கே கோல் போஸ்ட் இருக்கா, தெற்கே பாட்மிண்டன் கோர்ட் இருக்கா, மேற்கே கோல் போஸ்ட் இருக்கா, வடக்கே பாஸ்கெட்பால் கோர்ட் இருக்கா, நான் ஓடினேனா,''
""சுத்தி வளைச்சுப் பேசாதே..... விஷயத்துக்கு வா!''
""நீ இரவல் தந்த பேனா எங்கேயோ விழுந்திடுச்சு!''

ஆர்.யோகமித்ரா, 
செம்பாக்கம், சென்னை - 600073.


""ஏண்டா சோப்பை தூரமா தூக்கிப் போட்டுட்டு குளிக்கிறே?''
""நீங்கதானே சோப்பு போட்டு குளின்னு சொன்னீங்க?''

பி.சி.ரகு,
விழுப்புரம்.


""மூணு நாளா எங்கம்மா மோர்க்குழம்பே செய்யறாங்கடா!..... போரடிக்குது!''
""அப்போ "போர்க்குழம்பு' ன்னு சொல்லு!''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்- 627006.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.