முகப்பு
சிறுவர்மணி

நாக்கு!

நாக்கு ஒரு நோய் காட்டும் கண்ணாடி! சுவை அறிதல், பற்களால் உணவு மெல்லப்படுவதற்கு இலகுவாகத் தள்ளிக் கொடுத்தல், மென்ற உணவை விழுங்குதல் மற்றும் பேசுதல் போன்ற செயல்களுக்கு நாக்கு பயன்படுகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

நாக்கு ஒரு நோய் காட்டும் கண்ணாடி! சுவை அறிதல், பற்களால் உணவு மெல்லப்படுவதற்கு இலகுவாகத் தள்ளிக் கொடுத்தல், மென்ற உணவை விழுங்குதல் மற்றும் பேசுதல் போன்ற செயல்களுக்கு நாக்கு பயன்படுகிறது. நாக்கின் மேற்பரப்பில் சுவை உணரும் அரும்புகள் உள்ளன. இவற்றின் உதவியால்தான் இனிப்பு, கசப்பு, உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு முதலான பல சுவைகளை உணரமுடிகின்றது.

பேசுவதற்குக் காரணமாக விளங்குவது நாக்குதான்! நாக்கில் குறைபாடுகள் இருப்பின் பேச்சு சரியாக இருக்காது. நாவின் அடியில் பிரெனெலம் (ஊதஉசஅகமங) எனப்படும் ஒருவித தசை நாண் இருக்கிறது. இஃது சற்று சிறியதாய் இருந்துவிட்டால்கூடப் பேச முடியாது! 

பேச்சில் காணப்படும் குழறல்களுக்கு சிறியதாக அமைந்திருக்கும், இலகுவாக வளைதிறன் அற்ற நாக்கும் காரணமாக இருக்கக்கூடும்.

Advertisement

பொதுவாக நாக்கு இளஞ்சிவப்பு நிறமுடையது. இதன் நிறம், அல்லது தோற்றம் இவற்றில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அது உடலில் தாக்கப்பட்டிருக்கும் நோயைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள், நாக்கை நீட்டச் சொல்லிப் பார்ப்பதை ஒரு வழக்கமாகக் கையாளுகிறார்கள்.

நாக்கு வழவழப்பாகவும், ரத்தச் சிவப்பாகவும் காணப்பட்டால் அது ஈரல்களில் பாதிப்பு ஏற்பட்டதைக் குறிக்கும். 

நாக்கு வெளிறிப்போயிருந்தால் இரத்த சோகையைக் குறிக்குமாம்.

மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் மஞ்சள் காமாலை நோயைக் குறிக்குமாம். நாக்கில் ஆங்காங்கே கருப்புத் திட்டுகள் காணப்பட்டால் வைட்டமின் பி12 சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் ரத்த சோகையை அறிவிக்குமாம். 

நாக்கு ரத்தச் சிவப்பாக இருந்தால், ரத்தசோகையினால் ஏற்படும் தோல் வெடிப்பு நோயைக் குறிக்குமாம். 

சரி, நாம் தினமும் பல் துலக்குகிறோம்! சிலர் நாக்கைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் தற்போது பிரஷ்கள் வருகின்றன. 

தினம் நாக்கைச் சுத்தம் செய்வதால்.....

சுவைக்கும் திறன் மேம்படும்.

நாக்கில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை நீக்கிவிடலாம். 

வாய் துர்நாற்றம் நீங்கும்.

ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியம் மேம்படும்! 

(அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் செய்திகள் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.