சிறுவர்மணி

பழகு தம்பி பழகு!

DIN


குப்பை வண்டிக்காரர் தெருவின் 
கோடி வீட்டில் வருகிறார்!
இப்போதிருந்தே எழுந்து வந்து 
இருக்கும் குப்பை சேர்த்திடு!

கொடிகள் மரங்கள் குரோட்டன்ஸ் உதிர்க்கும் 
குப்பை இலைகள் மக்குமே!
ஒடிந்த பொருள்கள் பிளாஸ்டிக் எல்லாம் 
என்றும் மக்கா குப்பையே!

மக்கா குப்பை தனியே பிரித்து 
மகிழ்வாய் வண்டியில் போட்டிடு!
மக்கும் குப்பை மாறும் உரமாய் 
மூலைக் குழியில் சேர்த்திடு!

தோட்டம் குழியும் இல்லை என்றால் 
தனியே வண்டியில் போட்டிடு!
ஏற்றம் அளிக்கும் இந்தப் பழக்கம் 
என்றும் நன்றாம் அறிந்திடு!

அம்மா சமைத்த உணவுப் பண்டம் 
அதிகம் மீந்து விட்டதா?
அம்மா என்றே அழைக்கும் பசுவும் 
உண்ண வரும் அதனையே!
எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT