முகப்பு
சிறுவர்மணி

கடி

""என்னடா இது?.... படத்துலே ஒரே புகையா இருக்கு?''""நீங்கதானே புகைப்படம் வேணும்னு கேட்டீங்க?''

Updated On : 17 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM


""என்னடா இது?.... படத்துலே ஒரே புகையா இருக்கு?''
""நீங்கதானே புகைப்படம் வேணும்னு கேட்டீங்க?''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""லிஃப்டுலே நுழையும்போது கால் கட்டாயிடுச்சு!''
""ஐயய்யோ!..... அப்புறம்?''
""அப்புறம் டவர் கிடைச்சுடுச்சு! பேசிட்டேன்!''

Advertisement

எஸ்.பி.விஜயராகவன்,
சென்னை.

""உலகம் சுத்தும்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்டா!''
""எப்படி?''
""நேத்து ராத்திரி குப்புற படுத்திருந்த நான் காலையிலே மல்லாக்க படுத்திருந்தேனே!''


கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம் - 605602

""நேத்து உங்களைப் பார்க்கறதுக்கு, ஒரு "வாங்க போங்க' வந்தாங்கப்பா....
அப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சு இன்னோரு  "வாங்க போங்க' வந்தாங்க அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கறப்போ, இன்னோரு "வாங்க போங்க' வந்தாங்க....''
""நிறுத்துடா!.... ஒண்ணுமே புரியலே!''
""நீங்கதானே பெரியவங்களை, "வாங்க போங்க' ன்னு கூப்பிடணும்னு சொன்னீங்க!''

மு.பெரியசாமி, 
திருத்துறைப்பூண்டி - 614715.


""கேள்விக்கு பதில் தெரியலைன்னு கவலைப்படாதே.... தெரிஞ்ச வரைக்கும் எழுதுன்னு அப்பா சொன்னார்!''
""வெரிகுட்!.... எழுதுனியா?''
""முன்னாலே எழுதினவனை எட்டி, எட்டிப் பார்த்தேன் தெரியவே இல்லை!''

ஆர்.யோகமித்ரா,
சென்னை.



""ராமு, மணி எத்தனைடா?''
""நம்ம கிளாஸ்லே மூணு மணி இருக்காங்க சார்!''

நெ.இராமன்,
பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.