பகை மாட்சி
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
பொருட்பால் - அதிகாரம் 87 - பாடல் 7
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
- திருக்குறள்
உன்னுடன் நெருங்கியிருந்து
உன்னுடன் உறவாடிப் பேசி
உனக்கு விருப்பம் இல்லாததைச்
செய்பவனை விட்டு விலகிவிடு
Advertisement
இப்படிப்பட்ட உறவு
தேவையில்லை என்று
பொருளைக் கொடுத்துக் கூட
பிரிந்து வாழ்வது நல்லது.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்