எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க நேருமோ அது நற்செயல் ஆகாது.
- புத்தர்
நேரம் கிடைக்கிறதா, திட்டமிடு. பல செயல்கள் நிறைவேற திட்டமிடுதலே காரணம்.
- பா. விஜய்
நீதி, சத்தியம், தெளிவான புத்தி, தைரியம் இவற்றை விட சுகம் தரும் பொருள் ஏதும் இவ்வுலகில் இல்லை.
-மார்க் ஒளரேலியஸ்
பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல... அது ஒரு உயர்ந்த பண்பின் அறிகுறி.
-புத்தர்
எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளார். எனவே அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
- ராமகிருஷ்ண பரமஹம்சர்
சினம் விலகும்போது ஞானம் நெருங்குகிறது.
- யாரோ
இறைவனை நெருங்க, நெருங்க சுமை குறைகிறது.
- ராமகிருஷ்ண பரமஹம்சர்
உயர்ந்த நோக்கத்திற்காக அளிக்கப்படுவதே சிறந்த தானம்; தியாகம்; அருட்கொடை.
- வெ.இறையன்பு
தரும சிந்தனையே மனிதனின் அமைதியான இருப்பிடம்! நன்னடத்தையே அவனது பாதை.
- மென்சியஸ்
தருமம் செய்வதால் பணப்பை காலியாகிறது! ஆனால் இதயம் நிறைகிறது!
- விக்டர் ஹ்யூகோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.