அறன் வலியுறுத்தல்
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.
அறத்துப்பால் - அதிகாரம் 4 - பாடல் 8
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
- திருக்குறள்
Advertisement
அறங்கள் செய்ய ஒரு நாளும்
மறந்துபோகக்கூடாது
இடைவிடாமல் நன்மை செய்தால்
இடரில்லாமல் வாழலாம்.
நல்ல எண்ணம் கொண்டிருந்தால்
நன்மைகள் நாளும் நாடி வரும்
துன்பத்தின் வாசல் அடைத்துவிடும்
பிறவியைத் தடுக்கும் கல்லாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்