முகப்பு
சிறுவர்மணி

ஏசு வார்த்தை இனியது!

"ஒருகன் னத்தில் அறைப வர்க்கு மறுகன் னத்தைக் காட்டென்று' பெருமைக் குரிய ஏசு நாதர் நமக்குச் சொன்னார் அறிவுரை

Updated On : 25 டிசம்பர் 2021, 12:00 am IST
பகிர்:

"ஒருகன் னத்தில் அறைப வர்க்கு 
மறுகன் னத்தைக் காட்டென்று' 
பெருமைக் குரிய ஏசு நாதர் 
நமக்குச் சொன்னார் அறிவுரை

"இன்னா தனவே செய்யும் பேர்க்கும் 
இனிய உதவி செய்யென்று' 
செந்நாப் போதார் வள்ளு வர்தாம் 
செப்பி யுள்ளார் குறளுரை

அவற்றைச் சற்றே நினைவில் கொண்டு
அவனி அமைதி காணவே 
தவறு புரிவோர் நமது மனித 
உறவோர் என்னும் உணர்வொடு

Advertisement

குறைகள் திருத்தி நிறைகள் பெருக்கி
கூடி வாழ்ந்து மகிழுவோம் 
பொறையை மிஞ்சி மனித ஒருமை 
பேணும் சக்தி வேறுண்டோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.