முகப்பு
சிறுவர்மணி

நூல் புதிது!

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:


ஒரு கலைஞன் உதயமாகிறான்

- சிறுவர் கதைகள் -
ஆசிரியர் - தீபம் எஸ்.திருமலை
பக்கம் - 144
விலை - ரூ.110/-

ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை. 55 ஆண்டுகளாக எழுத்துச் சேவை புரிந்து வந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில், எண்ணிய முடித்தல் வேண்டும்.... விற்பனை எப்படி?... வேலை வேண்டும்... நம்பிக்கை... முதலிய 35 கதைகள் உள்ளன. அனைத்தும் அறிவுக்கும், மனதிற்கும் சிறந்த விருந்து. சிறியோர் முதல் பெரியோர் வரை ரசிக்கும் அருமையான புத்தகம்! வெளியிட்டோர் - சஞ்சீவியார் பதிப்பகம், டி1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், பழைய எண் 11, கவரை தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை - 600015. போன் - 9444270017.

திருக்குறள் விளக்க வனக்கதைகள்!

ஆசிரியர் - கொ . மா. கோதண்டம்
பக்கம் - 120
விலை - ரூ. 175/-

கலைமாமணி, சாகித்திய அகாடமி விருது பெற்றவர், இந்நூலின் ஆசிரியர் கொ.மா.கோதண்டம்! பறவைகளும், தாவரங்களும் கதாபாத்திரமாக மாறி திருக்குறளை மிக அருமையாக போதிக்கும் நூல்! சிறுவர்களுக்கான 38 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல். மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது! அன்புடைய பறவை, ஒழுங்கு முறை, எறும்புகளின் சிறந்த அரசாங்கம் ஆகிய கதைகள் வாழ்வின் நெறிகளை அருமையாக போதிக்கின்றன. பயன் மிக்க நூல்! வெளியிட்டோர் - கோரல் பப்ளிஷர்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், 8, 6-வது கிராஸ் தெரு, 8 - ஆவது மெயின் ரோடு, வைஷ்ணவி நகர். திருமுல்லைவாயில், சென்னை - 600109, பேசி - 9043050666.

பட்டாம்பூச்சி

(சிறுவர் பாடல்கள்)
ஆசிரியர் - கவிஞர் நல்லரசன்
பக்கம் - 120
விலை - ரூ. 120/-

மூத்த மொழி... திருக்குறள்.... எங்க அம்மா.... முதலிய 100 நூறு பாடல்கள்! அத்தனையும் அற்புதம்! நல்ல சந்தங்களுடன் கைகளைத் தட்டிப் பாட வைக்கும்! கருத்துச் செறிவும், அழகியலும் கலந்த பொக்கிஷம்! மரங்களை வெட்டிச் சாய்த்தபின், "குருவி எங்கே போனதோ... குயிலு என்ன ஆனதோ!... போன்ற வரிகள் மனதைத் தொடுகின்றன. இசையின் பெருமையைப் பறைசாற்றும் பாடலில், "கொட்டும் மழையும் இசைதானே... குருவிச் சத்தமும் இசைதானே!... இசையே எங்கும் கொண்டாட்டம்... எங்கும் செல்லும் வண்டாட்டம்!.... போன்றவை சில உதாரணங்கள்! வெளியிட்டோர் - பாவை பதிப்பகம், 214, நேதாஜி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் - 607001. பேசி - 9790519966.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.