குடி செயல்வகை
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை
பொருட்பால் - அதிகாரம் 103 - பாடல் 7
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
- திருக்குறள்
போர்க்களம் நோக்கி வீரர்கள்
படையெடுத்துச் சென்றாலும்
துணிச்சல் மிக்க வீரர்தான்
முன்னின்று பொறுப்புடன் செயல்படுவார்
Advertisement
குடும்பத்தில் எத்தனையோ இருந்தாலும்
ஆற்றல் உள்ளவரிடத்தில்தான்
குடும்பத்தை நடத்தும் பொறுப்புகள்
வந்து சேரும் வாழ்க்கையில்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்