சிறுவர்மணி

காவல்!

ஒரு முகாம் ஒன்றில் புதிய தளபதி நியமிக்கப்பட்டார்.  அவர் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, 2 காவலாளிகள் ஒரு பெஞ்சை காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

க.அருச்சுனன்


ஒரு முகாம் ஒன்றில் புதிய தளபதி நியமிக்கப்பட்டார். அவர் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, 2 காவலாளிகள் ஒரு பெஞ்சை காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர்அவர்கள் அருகில் சென்று, "" ஏன் அந்த பெஞ்சைக் காவல் காக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ""எங்களுக்குத் தெரியாது சார். உங்களுக்கு முன்னால் இருந்த தளபதி இப்படி செய்யச் சொன்னார், அதனால் நாங்கள் செய்கிறோம்!''

அவர் உடனே அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்து பேசினார். மேலும், இந்த குறிப்பிட்ட பெஞ்சை ஏன் இரண்டு காவலர்களைப் போட்டுக் காவல் காக்கச் செய்தார் என்று அவரிடமே கேட்டார்.

அதற்கு அந்த முன்னாள் தளபதி, ""எனக்குத் தெரியாது. முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் அதை சிரத்தையாக பாதுகாத்தனர். அதனால், நான் அந்தப் பாரம்பரியத்தை உடைக்காமல் காவல் காக்கச் செய்தேன். இரண்டு காவலர்கள் ஓய்வில் சென்ற பிறகு கூட புதிய காவலர்களை நியமித்து அதைச் செய்தேன்'' என கூறினார்.

ஏன் இப்படி அந்த பெஞ்சைக் காவல் காக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள புதிய தளபதிக்கு ஆவல் மேலிட்டது! அந்த ஆர்வத்தில் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது.

அதனால்...மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதிகளை சந்தித்துப் பேசினார்.
அவர்களுக்கும் பாரம்பரியத்தைக் காப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகக் கூறினர்.

புதியதாகப் பதவி ஏற்றிருந்த தளபதிக்கு ஆர்வம் தலைக்கேறிவிட்டது. ஒரு வழியாக அந்த பெஞ்சைக் காவல் காக்கச் செய்த முன்னாள் தளபதியைக் கண்டுபிடித்துவிட்டார்! அவர்தான் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினார் என்று அறிந்து கொண்டார்.

அவரிடம் சென்று, ""மன்னிக்கவும் ஐயா....நான் உங்கள் முகாமின் இப்போதைய புதிய தளபதி. முகாமில் ஒரு சாதாரண பெஞ்சை காக்க இரண்டு காவலர்கள் இன்னமும் நியமிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். காவல் காத்த காவலர்கள் பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் அந்த பெஞ்சை இன்னும் காவல் காக்க இரண்டு புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அப்படி என்ன அந்த பெஞ்சில் விசேஷம்?.... எதற்காக வருடக்கணக்கில் அதைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் தான் அதற்கு தொடக்கம் என அறிந்தேன். அவர்களை ஏன் அவ்வாறு செய்ய வைத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?'' என்று தயக்கத்துடன் கேட்டார்.

""என்ன...? அந்த பெயின்ட் இன்னுமா காயவில்லை..... ?.... நான் ரிடையர் ஆன தினத்தன்று அடிச்சது! அந்த பெயின்ட்!'' என்றார் அந்தப் பழைய தளபதி.

புதிய தளபதிக்கு அதிர்ச்சியாகிவிட்டது!

நீதி: கண்மூடித்தனமாக ஒரு செயலை செய்து கொண்டிருக்கக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT