புத்திசாலி மனிதன்
மாலை நேரம் காட்டு வழியேமனிதன் ஒருவன் வந்தான்பசி தீர்க்கும் பழம் தேடி
மாலை நேரம் காட்டு வழியே
மனிதன் ஒருவன் வந்தான்
பசி தீர்க்கும் பழம் தேடி
அங்கும் இங்கும் அலைந்தான்
உச்சிக் கிளையில் பழுத்தப் பழங்கள்
வாவா என்று அழைத்தன
கிளைகளில் தாவும் குரங்குகள் அவனைப்
பார்த்துப் பார்த்துச் சிரித்தன
கனிந்த பழங்கள் மர உச்சியிலே
பறிக்க அவனால் முடியவில்லை
புத்திசாலி மனிதன் மனதில் நல்ல
உபாயம் ஒன்று எட்டியது
Advertisement
சிறுகற்கள் தேடி எடுத்து வந்தான்
குரங்குகள் நோக்கி எறிந்தான்
கோபம் கொண்ட குரங்குகள் பழங்களை
எடுத்தெறிந்தது அவன் மீது
எறிந்த பழத்தை எடுத்த மனிதன்
புசித்தான் தன் பசிதீர
களைப்பு நீங்கி அந்த மனிதன்
நடந்தான் தன் வழிமேலே.