முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே இருப்பதற்கு என்ன காரணம்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

கேள்வி: பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே இருப்பதற்கு என்ன காரணம்?

பதில்: வெகு சில இடங்களில் சதுரம் மற்றும் செவ்வக வடிவில்  காணப்பட்டாலும், பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே அமைக்கப்படுகின்றன.

இதற்குக் காரணம், வட்ட வடிவத்துக்கு சதுரத்துக்கு இருப்பது போல நான்கு முனைகள் இல்லை. பிற வடிவங்களுக்கும் முனைகள் இருப்பதால், முனைகளில் எவ்வளவுதான் பிடிமானம் இருந்தாலும் காலப்போக்கில் இடிந்து விழ வாய்ப்புண்டு.

Advertisement

அதுவே வட்ட வடிவமாக இருந்தால் அவ்வளவு எளிதில் இடிந்து விழாது. மேலும், வட்ட வடிவமாக இருப்பதால் கிணற்றினுள் சீரான அழுத்தம் பராமரிக்கப்படும்.

வட்ட வடிவத்தின் சுற்றளவு பிற வடிவங்களின் சுற்றளவை விட குறைவாகவே இருக்கும். 

இதனால் வட்ட வடிவில் கிணறுகளை அமைப்பதற்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

கிணறுகளின் நீண்ட கால பயன்பாட்டுக்காகவே இந்த வடிவம் நமது முன்னோர்களால்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments