தீ நட்பு
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்
பொருட்பால் - அதிகாரம் 83 - பாடல் 7
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
- திருக்குறள்
தலைகுனிந்து வணங்கிடும்
பகைவனை நம்பக்கூடாது
பணிவு நேசம் என்று அதை
ஏற்றுக் கொள்ளக்கூடாது
வளைந்திருக்கும் வில்லினால்
தீங்குதான் நேருமென்று
தெரிந்துணர்ந்து கொள்வதுபோல்
பகைவனின் வேசம் உணர்ந்திடு
-ஆசி.கண்ணம்பிரத்தினம்