முகப்பு
சிறுவர்மணி

பாட்டி

குச்சிக் காலை நீட்டிகுழிந்த கண்ணைக் காட்டி பொக்கை வாயை ஆட்டி

Updated On : 20 மார்ச் 2021, 6:00 am IST
பகிர்:

குச்சிக் காலை நீட்டி
குழிந்த கண்ணைக் காட்டி 
பொக்கை வாயை ஆட்டி 
பூவாய்ச் சிரிக்கும் பாட்டி!

அந்தக் காலக் கதைகள் 
அழகாய்ச் சொல்லும் பாட்டி!
அருகில் நம்மைக் கூட்டி
அறிவுரை கூறும் பாட்டி!

தளர்ந்த மனதைத் தேற்றி 
தைரியம் கொடுக்கும் பாட்டி!
விளக்கு போல நமக்கு 
வீட்டில் இருக்கும் பாட்டி!

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.