முகப்பு
சிறுவர்மணி

கடி

""ராமு, பூட்டு திறக்கமாட்டேங்குது!''""பூட்டு எப்பவுமே திறக்காது!.....;சாவிதான் திறக்கும்!''

Updated On : 27 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:21 AM


""ராமு, பூட்டு திறக்கமாட்டேங்குது!''
""பூட்டு எப்பவுமே திறக்காது!.....;
சாவிதான் திறக்கும்!''

ஆர்.சுப்பு,
திருத்தங்கல்.

""பாடத்தை கவனிக்காம என்னடா செய்யறே?''
""நீங்க என்னை கவனிக்கிறீங்களான்னு பார்த்தேன்!''

Advertisement

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

""பாட்டி இந்தா சாக்லேட்!''
""எதுக்கு?''
""கொரானா ஊசிய அழாம போட்டுக்கோ!''

ஆர்.எம். அக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

""எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்யற மணி அண்ணா இப்போ என்ன செய்யறாரு?''
""....."பபுள் டாப்' தண்ணி சப்ளை 
செய்யறாரு!''

எஸ்.பி.விஜயகோபாலன், 
சென்னை - 600090.

""லாக்டவுன் முடிஞ்சு ஸ்கூல் திறந்தா என்ன செய்வே?''
""என் பெஞ்சுக்கு கீழே தொலைஞ்சு போன பென்சிலைத் தேடுவேன்!''

ஏ.நாகராஜன்,
பம்மல்.

""கூட்டலுக்கும், பெருக்கலுக்கும் என்ன வித்தியாசம் மாலா?''
""ரெண்டும் ஒண்ணுதான்!''
""எப்படி சொல்றே?''
""எங்க பாட்டி வீட்டைக் கூட்டச் சொல்லுவாங்க..... எங்க அம்மா பெருக்கச் சொல்லுவாங்க!''

ஆர்.சுப்பு,
திருத்தங்கல் - 626130.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.