சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: நேரு தந்த தோல்

ஜவாஹர்லால் நேரு  ஒரு சமயம் அரசியல் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆச்சார்ய கிருபளானி ஆப்பிள் பழங்களை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து நேருவுக்குக் கொடுத்தார்.

தினமணி

ஜவாஹர்லால் நேரு  ஒரு சமயம் அரசியல் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆச்சார்ய கிருபளானி ஆப்பிள் பழங்களை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து நேருவுக்குக் கொடுத்தார்.

நேருவோ ஆப்பிள் பழத்தோலைச் சீவிக் கீழே போட்டுவிட்டு பழத் துண்டுகளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

நேரு இப்படிச் செய்வதை கிருபளானி பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். "ஆப்பிள் பழத் தோல்களை இப்படி சீவிச் சீவி வீணடித்து விட்டீர்களே! அந்தத் தோலில்தானே வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. நம்மில் பலர் சத்தானதை விட்டுவிட்டு சக்கையை மட்டுமே உண்ணுகிறார்கள்' என்று கூறினார். 

நேருவோ கீழே விழுந்துகிடந்த பழத்தோல்களை எல்லாம் பொறுமையுடன் எடுத்து "இந்த முறை எனக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விட்டது. இனிமேல் பழங்களைச் சாப்பிடும்போது தோல்களையும் சேர்த்து சாப்பிடுகிறேன். இப்போது எனக்குக் கிடைக்காத இந்த சத்துக்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டுமே...  இதைச்சாப்பிடுங்கள்' என்று கூறி, பழத்தோல்கள்  நிறைந்த தட்டை கிருபளானியிடமே திருப்பிக் கொடுத்தார் நேரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT