சிறுவர்மணி

தமிழ்ப் புத்தாண்டு  

வருடப் பிறப்பு வருகிறதுவாழ்த்திப் பாட வாருங்கள்அறுபது ஆண்டுகள் கொண்டது நம்

வளர்கவி


வருடப் பிறப்பு வருகிறது
வாழ்த்திப் பாட வாருங்கள்
அறுபது ஆண்டுகள் கொண்டது நம்
அன்னைத் தமிழின் ஆண்டுளாம்!

சித்திரை பிறக்கும் நன்னாளில்
சிறந்த கனிகள் பலவைத்து
நித்திரை நீங்கி கண்ணாடி
நின்று பார்ப்போம் முன்னாடி!

வேப்பம் பூவில் பச்சடியும்
வெல்லம் போட்டுப் பாயசமும்
வைப்போம் சுவாமி முன்பாக
வாழ்த்தித் துதிப்போம் ஒன்றாக!

வருடப் பிறப்பு என்பதனால் 
வாங்கிய புதிய பஞ்சாங்கம் 
கருத்தாய்ப் படித்துப் பலன்சொல்ல
கைகள் கட்டிக் கேட்டிடுவோம்!

மாடு கன்றுகள் பெருகிடவும்
மண்வளம் செழித்து சிறந்திடவும் 
நாடி இறைவன் தாள்பணிந்து
நல்ல நாளில் வேண்டிடுவோம்!

சித்திரை மாதப் பெளர்ணமியாய் 
சிறந்து வாழ்க்கை ஒளிபெறட்டும்
அத்தகு மகிழ்ச்சி அனைவர்க்கும்
ஆண்டு முழுதும் கிடைக்கட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT