சிறுவர்மணி

இனிய கல்வி தேடு

ஞா. விசுவநாதன்

அம்மா காதில் தோடு
அப்பா வளர்ப்பது மாடு
அம்மான் போவது காடு
அக்கா நன்றாய் பாடு

தாத்தா கட்டினார் வீடு
தமிழ்த்தாய் பழித்தால் சாடு
மூத்தோர் கையில் ஏடு
முருகன் போட்டான் கோடு

காகம் கட்டுது கூடு
கருப்பன் வீடு ஓடு
ஆகாயம் முட்டுது மேடு
அடுப்பங் கரையில் பூடு

இந்தியா நமது நாடு
இனிய கல்வி தேடு
மந்தையில் இருக்கு ஆடு
மதிய வெயில் சூடு

அரசு போட்ட ரோடு
அதனைச் சிதைச்சால் கேடு
அருகில் பள்ளம் மூடு
ஆற்றல் வரும் விளை யாடு!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT