சிறுவர்மணி

ஆல்போல் வாழணும்

புலேந்திரன்

மலையைப் போல ஆல மரமும்
    அழகாய்த்  தோன்றுதே - அது
தலைக்கு மேலே கிளைகளை விரித்தே
    குடைபோல் நிற்குதே!

தன்னை நாடி பறந்தே வந்திடும் 
    பறவைகள் அனைத்துமே - மேலே
தங்கிக் கொள்ள தனது கிளையில்
    இடத்தைச் கொடுக்குதே! 

குட்டிக் குட்டியாய் ஆல மரத்தின்
    பழங்கள் இருக்குதே!-அவற்றை
கொத்திக் கொத்தி பறவைகள் தின்றே
    பசியைப்போக்குதே!

ஆல இலையும் ஆடு தின்ன
    உணவாய் ஆகுதே! - பல்லும்
ஆலம் விழுதால் துலக்கி வந்தால்
     உறுதி யாகுதே!

சிறுவர் கட்டி ஊஞ்ச லாட
    சிறிய  விழுதுமே! - தரையில் 
பெரிய விழுதும் ஊன்றி நின்றே
     மரத்தைத் தாங்குமே!

வாழ்ந்தால் ஆல மரத்தைப் போல
    வாழ வேண்டுமே!- நாம்
வாழ்ந்ததைப் பற்றி ஊரார்  புகழ்ந்தே
    பேச வேண்டுமே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT