முகப்பு
சிறுவர்மணி

புலிக்குட்டி

அய்யனார் மலையடிவார மலைமக்கள் குடிசைகளின் முன் நீலனும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:


அய்யனார் மலையடிவார மலைமக்கள் குடிசைகளின் முன் நீலனும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் ஏதோ வருவதைப் பார்த்ததும் அவர்கள் விளையாட்டை நிறுத்தினர். ஏதோ ஒரு விலங்கின் குட்டி வந்துக் கொண்டிருந்தது. பார்த்தால் அது ஒரு புலிக்குட்டி. நீலன் அதை தூக்கி வந்தான். மலைமக்கள் பலரும் கூடிவிட்டனர்.

அறையில் இருந்த வனத் துறை அதிகாரியும் வந்துவிட்டார்.

""நீலா.. புலியை சட்டப்படி மனிதர் வளர்க்கக் கூடாது''

""அய்யா.. இதை வளர்க்க என்னால முடியாதுய்யா.. அதன் அம்மாவை கண்டுபிடிச்சு விட்டுடுவேன்''.

ஒருநாள் குட்டியுடன் வனமெல்லாம் சுற்றினாள். மற்ற விலங்குகள் தின்று கழித்துப் போட்ட மாமிசத்தைத் தேடி குட்டிக்கு குடுத்தான்.

பல மாதங்கள் குட்டி அவனுடனே இருந்தது. ஊர் மாணவர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். ஒருநாள் குட்டி திடீரென்று காணாமல் போய்விட்டது. நீலன் மிகவும் வருத்தப்பட்டான்.

""அட தொலஞ்சதுன்னு.. நிம்மதியா இருப்பா'' என்றனர் ஊர் பெரியவர்கள்.

ஒருவருடம் ஆகிவிட்டது. ஊருக்குள் ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நீலன் நண்பர்கள் சிலர் வந்து, அவனை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றனர். முன் வரிசையில் அமர்ந்தனர்.

ஒரு புலி சைக்கிள்விட்டது. குதித்து கும்மாளமிட்டது. சுற்றி சுற்றி வந்தது. திடீரென்று நீலனைப் பார்த்ததும் அவன் மீது பாய்ந்து மடியில் அமர்ந்தது. சர்க்கஸ் பார்க்க வந்தவர்கள் கூச்சல் போட்டு ஓடினர்.

காவலர்கள் வந்தனர். நீலனைப் பார்த்தது, ""என்னடா?'' என்றனர்.

""ஐயா.. இந்தப் புலி போன வருடம் குட்டியாக இருந்தபோது, அம்மாவை விட்டு ஓடிவந்தது. நான் அதற்கு உணவூட்டி காப்பாற்றி வந்தேன். பின்னால காணவில்லை. இது அதான். சர்க்கஸ்காரங்க திருடி வந்துட்டாங்க என்றான் நீலன்.

சர்க்கஸ் மேலாளர் கைது செய்யப்பட்டார். ஓடிய மக்களை மைக்கில் திரும்ப வரச் செய்து, போலீஸார் சர்க்கûஸ பார்க்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.