குட்டிப் பூனை வீட்டிலே
கட்டித் தயிரைத் தேடுமாம்!
குட்டு போட்டால் தலையிலே
கொல்லைப் பக்கம் ஓடுமாம்!
தொல்லை கொடுக்கும் எலிகளைத்
துரத்திச் சென்றே அழிக்குமாம்!
பல்லி பாச்சை தரையிலே
பார்த்தால் கடித்துக் கொல்லுமாம்!
சுட்டிப் பூனை கத்தியே
சோறு கேட்டுத் தின்னுமாம்!
குட்டி வயிறு நிறைந்ததும்
குறட்டை விட்டே தூங்குமாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.