சிறுவர்மணி

பனித்துளியே

முனைவர் மலையமான்

பச்சைப் புல்லின் நுனிமேலே
    படிந்து கிடக்கும் பனித்துளியே
மெச்சும் உழவன் தலைப்பாகை
    போல நீதான் தெரிகின்றாய்!

விரிந்த பரந்த காட்சியினை
    சுருக்கிக் காட்டும் கண்ணாடி
அருகில் நிற்கும் பனைமரமும்
    அடங்கி உன்னுள் கிடக்கிறதே!

சோலைச் செடியின் அரும்பைப்போல்
    காலை வேளை பிறக்கின்றாய்
வேலை முடிந்த பூவைப்போல்
    மாலை அழிந்து மறைகின்றாய்!

நீண்டு மறைந்த சூரியனும்
    நாளும் கிழக்கே வருவதுபோல்
மீண்டும் காலை தோன்றுகிறாய்
    பிறப்பு வட்டம் காட்டுகிறாய்!

பலரும் போற்றும் முத்துப்போல்
    பெருமை அழகு தெரிகிறது
தொலைந்து விட்ட சில்லறைபோல்
    உனது உருவம் மறைகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT