குட்டி யானை முதுகிலே
    குயிலி குந்தி பாடுதாம்! 
சொட்டைப் புலியின் தலையிலே
    சிட்டு தாளம் போடுதாம்!
வட்டப் பாறையில் ஏறியே 
    வண்ண மயிலும் ஆடுதாம்! 
கட்டை மீது குந்தியே 
    கரடி மேளம் தட்டுதாம்!
நாஞ்சில் காட்டு குரங்குதான் 
    நாத சுரத்தை ஊதுதாம்! 
தூங்கு மூஞ்சி தேவாங்கு 
    சொக்க வைக்கும் வீணையாம்!
கண்ணைக் கவரும் ஆட்டமாம் 
    காதுக் கினிய கானமாம்! 
தம்பி போனால் பார்க்கலாம் 
    திம்பம் மலையின் காட்டிலே!
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.