ஆடு
ஆடே ஆடே ஓடுஆசை ஆடே ஓடுமேடு வரைக்கும் ஓடு
ஆடே ஆடே ஓடு
ஆசை ஆடே ஓடு
மேடு வரைக்கும் ஓடு
வேகமாக ஓடு
தலையை அசைத்து ஆடு
சாய்ந்து சாய்ந்து ஆடு
பச்சைப் புல்லைத் தேடி
தின்று முடித்து ஆடு
துள்ளித் துள்ளி ஓடு
துண்டு விடாதே ஓடு
முன்னால் பார்த்து ஓடு
முகம் திருப்பாமல் ஓடு
மேலே என்று பாடு
விண்ணைப் பார்த்து பாடு
உரத்த குரலில் பாடு
ஊக்கம் கொண்டு பாடு