இனிப்பு
அதிரசம் ஒன்றுஅரிசி முறுக்கு இரண்டு
அதிரசம் ஒன்று
அரிசி முறுக்கு இரண்டு
இனிப்புச் சீடை மூன்று
எள்ளுருண்டை நான்கு
குழிப்பணியாரம் ஐந்து
கொழுக்கட்டை ஆறு
தேங்காய்ப் போளி ஏழு
தேன்குழல் ஜாங்கிரி எட்டு
பூந்தி லட்டு ஒன்பது
பொரி உருண்டை பத்து
தட்டு நிறைய அடுக்கி
நாள் முழுக்கத் தின்பேன்
இனிப்பான சுவையைப் பற்றி
ஊருக்கெல்லாம் சொல்வேன்
-பாவண்ணன்