அம்மா பாடும் பாட்டு
என்னைக் குதிக்க வைக்கும்!
அந்தப் பாட்டுபோல
இனிய பாட்டு இல்லையே!
பாட்டி பாடும் பாட்டு
பழைய கால பாட்டு!
கேட்க கேட்க அதிலும்
தேனின் சுவை இருக்கும்!
அப்பா கூட எனக்கு
இனிய கதைகள் சொல்வார்!
தப்பாமல் நானும்தான்
தினமும் கேட்டுத் துயில்வேன்!
அண்ணன்கூட ஒருநாள்
அறிந்த பாட்டைப் பாடினான்!
அம்மா பாடும் பாட்டு
அந்தப் பாடல்போல் இனிமை இல்லையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.