முகப்பு
சிறுவர்மணி

சிறுவர் பாடல்: விழிப்போடு எதிர்கொள்

மழைக்காலம் வந்தாச்சுமழைப் பொழிவும் தொடங்கியாச்சு!ஆகவே அன்புச் செல்வங்களே!

Updated On : 13 ஆகஸ்ட் 2023, 12:00 am IST
பகிர்:

மழைக்காலம் வந்தாச்சு
மழைப் பொழிவும் தொடங்கியாச்சு!
ஆகவே அன்புச் செல்வங்களே!
சொல்வன கவனமாகக் கேளுங்கள்:

மழையில் நனைவதைத் தவிர்த்துவிட்டால்
சளி காய்ச்சல் வராது கேள்!
பள்ளிக்கும் செல்லலாம் எப்போதும் போல்!

வானில் வெட்டும் மின்னல் ஒளி
விழித்திரையை பதம் பார்க்கும்!
இடிக்கும் பேரிடி ஓசை
செவிப்பறையை சேதமாக்கும்!

Advertisement

மழைநீரில் ஆட்டம் போட்டால்
விரலிடுக்குகளில் புண் படரும்!
எனவே அன்புச் செல்வங்களே!
மழை நாள்களை  விழிப்போடு எதிர்கொண்டால் 
நலமாய் எல்லோரும் இருந்திடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.