தெரியுமா?
சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின்படி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் உச்சியில் உள்ள அசோக சக்கரத்தின் அமைப்பு வியக்கவைக்கிறது.
"சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின்படி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் உச்சியில் உள்ள அசோக சக்கரத்தின் அமைப்பு வியக்கவைக்கிறது. அது 9,500 கிலோ எடையும், 6.5.மீட்டர் உயரமும் கொண்ட இந்தத் தேசிய சின்னம் 33 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிற்பி சுனில் தேவ்ரே தலைமையில், 100 கலைஞர்கள் 9 மாதங்கள் உழைத்து உருவாக்கினர்.
இந்தியாவிலேயே உருவான முதல் ஹைட்ரஜன் பேருந்து பூனேவில் நடைபெற்ற விழாவில், அண்மையில் தொடக்கிவைக்கப்பட்டது. சி.எஸ்.ஐ.ஆர்., கே.பி.ஐ.டி. டெக்னாலஜி இணைந்து தயாரித்துள்ளது. ஹைட்ரஜன் ஆக்சிஜன் கலக்கும்போது உருவாகும் மின்சாரத்தில் இயங்குகிறது. இதில் இருந்து தண்ணீரும் வெப்பமும் புகையாக வெளியேறுகிறது.
சைபீரியா முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா உருவாக்கிய ரயில்பாதையே உலகின் மிகப் பெரிய ரயில் பாதையாகும். மாஸ்கோவையும், வினாடிவஸ்டாக்கையும் இணைக்கும் டிரான்ஸ் சைபீரியன் ரயில்பாதை 9,288.2 கி.மீ.நீளம் கொண்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை நின்று செல்லும். பயணத்தை முடிக்கவே ஆறு இரவு, ஏழு பகல்கள் தேவைப்படும்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலகின் மிகப் பெரிய ராட்சதக் கண்ணாடி உள்ளது. அந்த நகரின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் கலைநுட்பத்துடன் உள்ளது. மில்லேனியம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முட்டை வடிவிலான இந்தக் கண்ணாடி, "மேகங்களின் கதவு' என்று அழைக்கப்படுகிறது. இதன் எடை 120 டன்.
பெங்குவின் பறவை பெரும்பாலும் கடற்கரைகளில் நடந்துதான் செல்லும். நிலத்தில் கொஞ்சமும் பறக்காத இந்தப் பறவைக்கு இறக்கைகள் உண்டு. ஆனால், இறக்கைகளைக் கொண்டு கடலில் நீந்திச் செல்லும்.
மத்திய கிழக்கு நாடான ஈரான் கிழக்குப் பகுதியில் "டஸ்ட் இலூட்' எனும் பாலைவனப் பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. சராசரியாக, 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பம்பதிவாகிறது. எந்த உயிரினமும் வாழ வாய்ப்பில்லை. ஆனால், 2005இல் இங்கு 71 டிகிரிசெல்சியஸ் வெப்பம் பதிவானது.