சிறுவர்மணி

இனிய இரவுப் பொழுது!

அந்திவேளை நெருங்கியாச்சுஅந்திமந்தாரையும் பூத்தாச்சுசந்திரன் வானில் வந்தாச்சு

நா. கிருஷ்ணமூர்த்தி

அந்திவேளை நெருங்கியாச்சு
அந்திமந்தாரையும் பூத்தாச்சு
சந்திரன் வானில் வந்தாச்சு
நந்தவனம் அமைதியில் ஆழ்ந்தாச்சு!

ஓடையில் நீர் பெருகலாச்சு
மடைமாறி வயலில் பாயலாச்சு
காடை கௌதாரி கூடுகளில் அடைஞ்சாச்சு
காடுகளில் விலங்குகள் உறங்கியாச்சு!

வானில் நட்சத்திரங்கள் தெரியலாச்சு
மனதில் அமைதி நிறைந்தாச்சு
கண்களை இமைகள் மூடலாச்சு
கனவுகளும் மெல்ல வரலாச்சு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT