விடுகதைகள்
பாயைச் சுருட்டவும் முடியாது. அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது.
1. பாயைச் சுருட்டவும் முடியாது. அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது.
2. காட்டில் உள்ள குடை வீட்டில் இல்லாத குடை.
3. கிண்ணம் நிறையத் தண்ணீர் இருக்கு, குருவி குடிக்க வழியில்லை.
4. ரத்தத்தில் வளர்வது, ஆனால் ரத்தம் இல்லாதது.
5. பற்கள் பல உண்டு, ஆனால் கடிக்கத் தெரியாது.
6. தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்.
7. ஆடையோ கருப்பு; சுழன்று சுழன்று ஆடுவதோ நாட்டியம்; ஆனால் வருவதோ பாட்டு.
8. வெட்டிக் கூறுபடுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை.
9. மூன்று நிறக் கிளிகளாம், கூண்டுக்குள் போனால் ஒரே நிறமாம்.
விடைகள்:
1.வானம், நட்சத்திரங்கள். 2. நாய்க்குடை (காளான்). 3. இளநீர். 4. நகம். 5. சீப்பு.
6. தவளை. 7. இசைத்தட்டு 8. சீட்டுக்கட்டு. 9. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.