1.ஒரு மரத்திலே உச்சாணிக் கிளையிலே ஓட்டுச்சட்டியிலேயே இருக்கிறது களிமண். அது என்ன?
2. ஒளியில் தொடர்வான். இருளில் மறைவான். அவன் யார்?
3. இரவு வந்தால் பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம். அது என்ன?
4.உருப்படியாய் ஒரு பிள்ளை பெற்று உயிரை விடுவாள். அவள் யார்?
5. நீள உடம்புக்காரன், நெடுந்தூரம் பயணக்காரன், அவன் யார்?
6. இவன் கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு. அவன் யார்?
7. முத்து முத்து தோரணம், தரையில் விழுந்து ஓடுது. அது என்ன?
விடைகள்.
1.விளாம்பழம், 2.நிழல், 3.வானம், நட்சத்திரங்கள், 4.வாழை, 5. ரயில், 6.தலைமுடி, 7. மழைத்துளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.