சிறுவர்மணி

காலைச் சூரியமனே...

முனைவர் மலையமான்

காலைச் சூரியனே! உலகின்

கண்ணைத் திறப்பவனே!

மூலை முடுக்கெல்லாம்- இன்ப

மகிழ்ச்சி விரிப்பவனே!

நேற்று மாலையிலே- மிதக்கும்

நட்பு மேகமதில்

மேற்கே நீ மறைந்தாய் - இன்று

முளைத்தாய் நேர்கிழக்கே

எங்குச் சென்றிருந்தாய்- இரவில்

என்ன செய்திருந்தாய்?

தங்கிப் பால் குடித்து- சற்று

தூங்கி வந்தாயா?

அம்மா அழைத்தாரா? உனது

அன்பர் இழுத்தாரா?

சும்மா படுத்திருந்து - கனவு

சுகமும் பெற்றாயா?

நிலவாம் மகளுக்காய்- கண்ணா

மூச்சு ஆட்டத்தில்

தலையை மறைத்தொளித்து- பிறகு

தோன்றி மகிழ்ந்தாயா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT