முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெர்மாட் நகரம் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

Updated On : 22 டிசம்பர், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 21 டிசம்பர், 2024 at 8:44 PM

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெர்மாட் நகரம் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்த அழகிய இடம் நீண்டகாலமாகவே 'கார்கள் இல்லாத நகரம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்

படுகிறது. இந்த நகரின் ஐந்து கி.மீ. தொலைவுக்கு அப்பால்தான் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்பின்பு ரயில், மின்சாரப் பேருந்து, குதிரை வண்டிகள் மூலமாகத் தான் சுற்றுலாப் பயணிகள் நகரத்தின் அழகை ரசிக்க முடியும். அன்றாட வாழ்க்கையின் சலசலப்புகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவோருக்கு இந்த நகரம் பொருத்தமானது.

ஆப்பிரிக்க கண்டத்தின் அருகில் இருக்கும் தீவு மொரிஷியஸ். 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்ட தீவின் நிலப்பரப்பு 2,045 சதுர மீட்டராகும். இங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். கடுமையான உழைப்பாளர்களான இவர்களைக் கௌரவிக்கும் விதமாக, அந்த நாட்டின் பணம், நாணயங்களில் தமிழ் எண்களையும், எழுத்துகளையும் அச்சிட்டு அந்த நாடு வெளியிடுகிறது. மொரிஷியஸின் தேசிய மொழியில் பல தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Updated On : 21 டிசம்பர், 2024 at 8:44 PM

போட்ஸ்வானா என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு. இது தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சாம்பியா, ஜிம்பாவே ஆகிய நாடுகளுக்கு அருகே இருக்கிறது. கபரோன் என்பது நாட்டின் தலைநகரமாக விளங்குகிறது. இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் உள்ளது. இருப்பினும், செட்ஸ்வானா எனும் உள்நாட்டு மொழியை அந்த நாட்டு மக்கள் பேசுகின்றனர்.

உலகில் அதிக யானைகளைக் கொண்ட நாடும் இதுவே. வைர உற்பத்தியும் இங்கு அதிகம். இந்த நாட்டு நாணயம் பூலா என்று அழைக்கப்படுகிறது. இது செட்ஸ்வானா மொழிச் சொல் ஆகும். இதற்கு பொருள் 'மழை' என்பதாகும். வரிக்குதிரையே நாட்டின் தேசிய விலங்காகும்.

அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஆண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் போட்ஸ்வானாவைச் சேர்ந்த டெபோகோ என்பவர் பந்தயத் தூரத்தை 19.46 விநாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார். இதுவே ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்த நாடு பெற்ற முதல் தங்கமாகும்.

Updated On : 21 டிசம்பர், 2024 at 8:45 PM

ஜெர்மன் நாட்டில் இருந்து நெதர்லாந்து செல்லும் பாதையில் 'ப்ளாக்பாரஸ்ட்' என்ற இடம் உள்ளது. இங்குள்ள மண்ணில் இரும்புத் தாது இருப்பதால், மரங்களின் நிறம் கறுப்பாக இருக்கும். எனவே இந்தப் பகுதி 'கறுப்புக் காடுகள்' என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற குக்கூ கடிகாரங்கள் இந்த மரத்தால் தயாரிக்கப்படுகின்றன. இங்கு மிகப் பெரிய கடிகாரத் தொழிற்சாலைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.