தெரியுமா?
உணவு இரைப்பைக்குச் செல்லும் நேரம்: ஏழு விநாடிகள்
உண்ணப்பட்ட உணவு இரைப்பைக்குச் செல்லும் நேரம் ஏழு விநாடிகள்.
மனிதனுக்கு ஏற்படும் தும்மலின் வேகம் மணிக்கு நூல் மைல்.
நமது வயிற்றுலுள்ள ஜீரண உறுப்புகளின் எண்ணிக்கை மூன்று கோடியே 52 லட்சம் ஆகும்.
Advertisement
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
-------------------------------------------------------------------------------------
சாக்ரடீஸ் இறக்கும் முன்னர் அவருடைய சீடர்கள் இறுதிச் சடங்கு செய்வது குறித்து கவலைப்பட்டனர். அவர்கள் சாக்ரடீஸிடம் சென்று, ""இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டனர். அதற்கு சாக்ரடீஸ், ""என்னுடைய எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகின்றனர். நீங்கள் என்னைப் புதைக்கத் திட்டமிடுகிறீர்கள். எனவே இதில் நண்பன் யார்? பகைவன் யார்? நீங்கள் இருவருமே என் இறப்பிலேயே குறியாக இருக்கிறீர்கள். யாருமே என் உயிரைப் பற்றி கவலைப்படுவதாகக் தெரியவில்லை'' என்றார்.
பொதுவாக, அருங்காட்சியகத்தில் "தொடாதீர்கள்' என்ற பலகையைதான் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்கத் தலைநகரான வாஷிங்கடன்னில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கு விடுக்கும் அழைப்பே "தொட்டுப் பாருங்கள்' என்பதுதான்.
- நஞ்சன்