சிறுவர்மணி

மேன்மை மயிலே...

வான வில்லின் நிறங்கள் தோகையில் மின்னும் மயில்

முனைவர் மலையமான்

தோகை விரித்து என்முன் இங்குத்

துள்ளும் மயிலே!

வேக மாக நடனம் ஆடும்

விந்தை மயிலே!

வான வில்லின் நிறங்கள் எல்லாம்

வாழ்த்தும் மயிலே!

தானம் செய்யும் வள்ளல் போல

தோன்றும் மயிலே!

நூறு கண்கள் தோகை கொண்ட

நட்பு மயிலே!

மாறு கின்ற நிறங்கள் கழுத்தில்

மின்னும் மயிலே!

கருப்பு மேகம் கண்டே மகிழ்ச்சி

கொண்ட மயிலே!

விருப்ப மழைக்கு வணக்கம் சொல்லி

வாழ்த்தும் மயிலே!

பறவை களுக்கே அரசி யான

புனித மயிலே!

உறவைத் தேட ஆட்டம் ஆடி

ஓய்ந்த மயிலே!

இயற்கை அழகே! துள்ளும் கலையே!

இன்ப மயிலே!

மயக்கும் பாட்டே! மனதில் நிலைத்த

மேன்மை மயிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT