புத்தரின் உருவத்தை முதன்முதலில் நாணயத்தில் பொறித்தவர்- கனிஷ்கர்.
இரும்பு துருப் பிடிக்காமல் இருக்க துத்தநாகம் பயன்படுகிறது.
கண்ணாடிகள் தயாரிக்க உதவும் அடிப்படை பொருள்- மணல்.
சீனப் பெருஞ்சுவரின் நீளம் 2,400 கி.மீ. ஆகும்.
சிதம்பரம் கோயிலுக்கு பொற்கூரை வேய்ந்த மன்னர்- பராந்தகச் சோழன்.
கடலில் கலக்காத நதி- யமுனை.
ஒரு ஆண்டுக்கு 13 மாதங்களைக் கொண்ட ஒரே நாடு எத்தியோப்பியா.
செல்போனின் தந்தை என்று அறியப்படுபவர் மார்ட்டின் கூப்பர்.
எறும்புகளே வாழாத இடம்- துருவப் பிரதேசம்.
உலகின் மிகப் பெரிய அஞ்சல் வலையமைப்பைக் கொண்ட நாடு- இந்தியா.
ஜி.எஸ்.டி. வரியை முதலில் அறிமுகப்படுத்திய நாடு- பிரான்ஸ்.
மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாத நாடு- பின்லாந்து.
திரையரங்குகள் இல்லாத நாடு- சவூதி அரேபியா.
சீனாவில் ஆண்டுக்கு ஏழு நாள்கள் மட்டுமே அரசு விடுமுறையாகும். மகளிர் தினத்தன்று பெண்களுக்கும், இளைஞர் தினமான அந்த நாட்டினர் கொண்டாடும் மே 4-இல் இளைஞர்களுக்கும் அரை நாள் விடுமுறையாகும்.
குளிர்காலத்தில் திடீர் மழை பெய்தால், 'அதிர்ஷ்ட மழை' என்று சீனாவில் அழைக்கின்றனர்.
சீனாவில் டபுள் டக்கர் விமானங்கள் அதிகம்.
யானைகளைக் கொன்றால் இலங்கையில் மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது.
சிங்கத்தின் கர்ஜனையை 8 கி.மீ. தொலைவுக்கும் கேட்க முடியும்.
பூச்சிகளில் வேகமாகப் பறக்கக் கூடியது- தும்பி.
கங்காரு சைவப் பிராணியாகும்.
பாலூட்டும் உயிரினம்- எறும்புத்தின்னி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.